தேசிய செய்திகள்

ரெயில்வே கிராசிங் அருகே விளையாடிய கோபத்தில் கல் எறிந்த தந்தை; 2 வயது மகன் பலி + "||" + Man throws stone at 2-yr-old son for playing near railway crossing, dies

ரெயில்வே கிராசிங் அருகே விளையாடிய கோபத்தில் கல் எறிந்த தந்தை; 2 வயது மகன் பலி

ரெயில்வே கிராசிங் அருகே விளையாடிய கோபத்தில் கல் எறிந்த தந்தை; 2 வயது மகன் பலி
ரெயில்வே கிராசிங் அருகே விளையாடிய கோபத்தில் தந்தை கல் எறிந்ததில் 2 வயது மகன் பலியாகி உள்ளான். #RailwayCrossing

லூதியானா,

பஞ்சாபில் தப்ரி என்ற பகுதியில் வசித்து வருபவர் சோட்டே லால் (வயது 42).  இவருக்கு 3 மகள்கள் மற்றும் 2 வயது மகன் என 4 குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில், லாலின் குழந்தைகள் ரெயில்வே கிராசிங் அருகே விளையாடி கொண்டு இருந்துள்ளனர்.  இதனை கண்ட லால் ஆத்திரமடைந்து உள்ளார்.  அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக கற்களை எடுத்து அவர்களை நோக்கி வீசியுள்ளார்.

இதில் அவரது 3 மகள்களும் அங்கிருந்து ஓடிய நிலையில் தப்பினர்.  ஆனால் லாலின் மகன் மீது கல் பட்டு அவன் இறந்து விட்டான்.  இதனை அறிந்த லால், ஓடும் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால் அருகில் இருந்தவர்கள் லாலை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  லால் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.