தேசிய செய்திகள்

கொல்கத்தா வந்த சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு + "||" + There was a technical disaster in the Singapore flight that came to Kolkata

கொல்கத்தா வந்த சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

கொல்கத்தா வந்த சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
சிங்கப்பூரில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்துக்கு சிங்கப்பூர் விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது.

கொல்கத்தா,

விமான ஓடுபாதையில் அந்த விமானம் தரை இறங்க முயன்ற போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தில் இருந்து திரவ எரிபொருள் கீழே கொட்ட தொடங்கியது.

எனினும் விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரை இறக்கினார். அதில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

எரிபொருள் கொட்டியதால் உடனடியாக அந்த ஓடுபாதை மூடப்பட்டது. மற்றொரு ஓடுபாதையில் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எரிபொருளை சுத்தம் செய்த பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அந்த ஓடுபாதை மீண்டும் திறக்கப்பட்டது.