ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இயற்கை எரிவாயு பெட்ரோலிய அமைச்சக குழு சிபாரிசு


ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இயற்கை எரிவாயு பெட்ரோலிய அமைச்சக குழு சிபாரிசு
x
தினத்தந்தி 8 May 2018 11:45 PM GMT (Updated: 8 May 2018 9:19 PM GMT)

பெட்ரோலிய பொருட்களில் ஒன்றான இயற்கை எரிவாயுவை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பெட்ரோலிய அமைச்சக குழு சிபாரிசு செய்துள்ளது.

புதுடெல்லி, 

பெட்ரோலிய பொருட்களில் ஒன்றான இயற்கை எரிவாயுவை சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் ஆய்வு பிரிவு சிபாரிசு செய்துள்ளது. இப்பிரிவு, பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அந்த பிரிவின் தலைமை இயக்குனர் அத்ரேய தாஸ், இத்தகவலை தெரிவித்தார்.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட வாயு மீதான சுங்க வரியை நீக்குமாறு பெட்ரோலிய அமைச்சகத்துக்கு சிபாரிசு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். பெட்ரோல், டீசல் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

Next Story