டுவிட்டர் சுயதகவலில் 'இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என குறிப்பிட்டு உதவி கோரிய மாணவருக்கு சுஷ்மாவின் பதில் என்ன?


டுவிட்டர் சுயதகவலில் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என குறிப்பிட்டு உதவி கோரிய மாணவருக்கு சுஷ்மாவின் பதில் என்ன?
x
தினத்தந்தி 10 May 2018 8:41 AM GMT (Updated: 10 May 2018 8:41 AM GMT)

டுவிட்டர் சுயதகவலில் ‘இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரை’ சேர்ந்தவர் என குறிப்பிட்டு பிலிப்பைன்ஸில் இருந்து உதவி கோரிய மாணவருக்கு சுஷ்மா பதிலளித்து உள்ளார். #SushmaSwaraj


புதுடெல்லி,


இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும், பிரச்சனையை சந்திக்கும் இந்தியர்களுக்கு உடனடியாக உதவிகளை செய்து வருகிறார். இந்தியர்கள் பிரச்சனையென சமூக வலைதளங்களில் அவருக்கு தகவல் கொடுத்தாலும், இந்திய தூதரகம் நடவடிக்கையை மேற்கொள்ள உடனடியாக உத்தரவிடுகிறார் சுஷ்மா சுவராஜ். இதுபோன்று, பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்கும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாணவர் சேயிக் அதீக், சுஷ்மா சுவராஜிடம் டுவிட்டரில் உதவியை கோரினார். மாணவர் அவருடைய டுவிட்டர் சுயதகவலில் தன்னை ‘இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரை’ சேர்ந்தவர் என தெரிவித்து உள்ளார். உதவி கோரிய மாணவருக்கு சுஷ்மா நேர்த்தியான பதிலை கொடுத்து உள்ளார். 

சேயிக் அதீக் தன்னுடைய உதவி கோரிக்கையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த நான் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறேன், என்னுடைய பாஸ்போர்ட் சேதம் அடைந்துவிட்டது. புதிய பாஸ்போர்ட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன் கோரிக்கை விடுத்து இருந்தேன். மருத்துவ பரிசோதனைக்காக நான் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் இப்போது உள்ளது எனக்கு புதிய பாஸ்போர்ட் கிடைக்க உதவி செய்யுங்கள்,” என குறிப்பிட்டு இருந்தார். ஏப்ரல் 5-ம் தேதி சேயிக் அதீக் தன்னுடைய டுவிட்டரில் சுஷ்மாவிற்கு கோரிக்கையை முன்வைத்து உள்ளார். டுவிட்டரில் குறைகளை கூறும் இந்தியர்களுக்கு உடனடியாக பதிலளிக்கும் சுஷ்மா, சேயிக் அதீக்கிற்கும் பதில் உரைத்து உள்ளார். 

நீங்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தால் உதவி செய்வேன் என பதில் கொடுக்கப்பட்டது சுஷ்மா தரப்பில். 

 “டுவிட்டர் சுயதகவல் நீங்கள் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர் என தெரிவிக்கிறது, இதுபோன்ற விஷங்களுக்கு இடம் கிடையாது,” என சுஷ்மா பதில் டுவிட் செய்து உள்ளார். இதனையடுத்து மாணவர் தன்னுடைய டுவிட்டர் சுயதகவலில் தன்னுடைய இருப்பிடம் ஜம்மு காஷ்மீர்/மணிலா என குறிப்பிட்டு உள்ளார். மாணவர் தன்னுடைய தவறை திருத்தியதை அடுத்து “உங்களுடைய சுயதகவலை திருத்தியதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்,” என குறிப்பிட்ட சுஷ்மா மணிலாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மாணவருக்கு உதவுமாறு உத்தரவிட்டு உள்ளார். சுஷ்மா சுவராஜின் இரு டுவிட் செய்திகளும் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு உள்ளது, விருப்பம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story