தேசிய செய்திகள்

ஜின்னா ஒரு மகா புருஷர் - பா.ஜ.க பெண் எம்.பி + "||" + BJP MP calls Jinnah 'maha purush'

ஜின்னா ஒரு மகா புருஷர் - பா.ஜ.க பெண் எம்.பி

ஜின்னா ஒரு மகா புருஷர் - பா.ஜ.க பெண் எம்.பி
ஜின்னா ஒரு மகா புருஷர் என பா.ஜ.க பெண் எம்.பி தெரிவித்துள்ளார். #BJPMP #JinnahMahaPurush
பாஹ்ரைச்,

முகமது அலி ஜின்னா நாட்டுன் சுதந்திரத்திற்காக தன்னை அர்ப்பணித்த  ஒரு மகா புருஷர் என பா.ஜ. பெண் எம்.பி. சாவித்திரி பால் பூலே தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர் சங்க அறையில் பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா படத்தை அகற்ற வேண்டும் என முதல் முறையாக போர்க்கொடி தூக்கினார் பா.ஜ. எம்.பி. சதீஷ் கவுதம். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவர்களிடையே இரு பிரிவாக பிரிந்து போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கு கொண்டு சென்றது.


இந்நிலையில், ’பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா, நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னை அர்பணித்த ஒரு மகா புருஷர் எனவும், விடுதலைக்காக பாடுபட்ட இவர் போன்ற தலைவர்கள் எப்போதும் நினைவு கூற வேண்டியவர்கள், என பா.ஜ.க. வின் பெண் எம்.பி சாவித்திரி பாய் பூலே வியாழக்கிழமை அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.