தேசிய செய்திகள்

வேண்டுதலுக்காக நாக்கை அறுத்துக் கொண்ட பெண் + "||" + Woman Chops Off Her Tongue, Offers It At A Temple In Madhya Pradesh

வேண்டுதலுக்காக நாக்கை அறுத்துக் கொண்ட பெண்

வேண்டுதலுக்காக நாக்கை அறுத்துக் கொண்ட பெண்
வேண்டுதலுக்காக பெண் ஒருவர் நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்

மத்தியப்பிரதேசத்தின் தராஸ்மா பகுதியைச் சேர்ந்தவர் குத்தி தோமார், இவர் மொரேனா அருகே உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் சென்று சாமி கும்பிட்டு  வந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை வழக்கம் போல் கோவிலுக்குச் சென்றவர், அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தமது நாக்கை அறுத்துக் கொண்டார். 

இதனால் மயங்கி விழுந்தவரை அங்கிருந்தவர்கள்   உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.  வேண்டுதலுக்காக, தோமார் தமது நாக்கை அறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.