ரூ.8.64 லட்சம் மின்சாரக் கட்டணம்; காய்கறி கடைக்காரர் தற்கொலை


ரூ.8.64 லட்சம் மின்சாரக் கட்டணம்; காய்கறி கடைக்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2018 6:49 AM GMT (Updated: 11 May 2018 6:49 AM GMT)

மின்சாரக் கட்டணமாக ரூ.8.64 லட்சம் வந்ததால் காய்கறி கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். #ElactricityBill #Suicide

அவுரங்காபாத்,

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள பாரத் நகர் பகுதில் 40 வயதான ஜகன்நாத் ஷெல்கி என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்று காலை அவரது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக, ஷெல்கி தனது காய்கறி கடைக்கு மின்சார கட்டணமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கட்டி வந்துள்ளார். இந்த மாத மின்சார கட்டணம் ரூ 8.64 லட்சம் என்றும், 61,178 யூனிட்ஸ் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று மஹாராஷ்டிரா மாநில மின்சாரம் விநியோக வாரியம் கடந்த வாரம் அவருக்கு ஒரு ரசீதை அனுப்பியது. இந்த ரசீதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷெல்கி, இது தொடர்பாக மின்சாரம் விநியோக வாரியத்திற்கு பலமுறை சென்றார். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான ஜகன்நாத் ஷெல்கி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது வீட்டில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றிய போலீசார், அந்த கடிதத்தில், "என் தற்கொலைக்கு காரணம் அதிகமாக வந்த மின்சார கட்டணம் தான்" என எழுதி வைக்கப்பட்டு இருந்தாக தெரிவித்தனர். மேலும் புந்த்லிநகர் போலீசாரால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த தவறைச் செய்த பில் கிளார்க் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மஹாராஷ்டிரா மாநில மின்சார விநியோக வாரியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story