உங்கள் கணவரை காப்பாற்றுவோம், பா.ஜனதா எம்.எல்.ஏ. மனைவியிடம் ரூ. 1 கோடி கேட்ட போலி சிபிஐ அதிகாரிகள்!


உங்கள் கணவரை காப்பாற்றுவோம், பா.ஜனதா எம்.எல்.ஏ. மனைவியிடம் ரூ. 1 கோடி கேட்ட போலி சிபிஐ அதிகாரிகள்!
x
தினத்தந்தி 11 May 2018 8:59 AM GMT (Updated: 11 May 2018 8:59 AM GMT)

உன்னோவ் பலாத்காரம் சம்பவத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மனைவியிடம் சிபிஐ அதிகாரிகள் என மோசடி கும்பல் ஒரு கோடி கேட்ட தகவல் வெளியாகி உள்ளது. #UnnaoCase #BJP

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரை போலீஸ் கைது செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் என ஏமாற்றி போலி கும்பல் ஒன்று எம்.எல்.ஏ.வின் மனைவியிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் வெளியே தெரியவந்து உள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி இல்லையென செய்வோம் என போலி கும்பல் அவருடைய மனைவியை நாடிஉள்ளது. மூத்த போலி சிபிஐ அதிகாரிகள் போன்று ஏமாற்றிய இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அலோக் திவேதி மற்றும் விஜய் ராவத் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 

இதுதொடர்பாக காசியாபூர் போலீஸ் அதிகாரி சுஜீத் குமார் ராய் பேசுகையில், எம்.எல்.ஏ.வின் மனைவி (பஞ்சாயத்து தலைவி) காவல் நிலையத்தில் புதன் கிழமையன்று புகார் ஒன்றை கொடுத்தார், அதில் தொலைபேசியில் பேசிய இருவர் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரை காப்பாற்ற ரூ. 1 கோடி கொடுக்கமாறு கேட்டனர் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டது. குற்றவாளிகளை கைது செய்து உள்ளோம் என்றார். குற்றவாளிகளின் செல்போன் நகர்வை வைத்து போலீஸ் அவர்களை கைது செய்து உள்ளனர்.

 முக்கிய குற்றவாளியான திவேதி முதலில் பா.ஜனதா தலைவர் என அடையாளம் காட்டியுள்ளான், பின்னர் சிபிஐ அதிகாரி என கூறிஉள்ளான் என்பது தெரிய வந்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story