தேசிய செய்திகள்

ரூ. 17.62 லட்சம் பணத்துடன் எஸ்.பி.ஐ. ஏடிஎம்மை தூக்கி சென்ற கொள்ளையர்களுக்கு வலைவீச்சு! + "||" + SBI ATM uprooted and taken away in Chatra

ரூ. 17.62 லட்சம் பணத்துடன் எஸ்.பி.ஐ. ஏடிஎம்மை தூக்கி சென்ற கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!

ரூ. 17.62 லட்சம் பணத்துடன் எஸ்.பி.ஐ. ஏடிஎம்மை தூக்கி சென்ற கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!
ரூ. 17.62 லட்சம் பணத்துடன், எஸ்.பி.ஐ. ஏடிஎம்மை கொள்ளையர்கள் தூக்கி சென்ற விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரிக்கிறது. #SBIATM
சாத்ரா,
 
ஜார்க்கண்ட் மாநிலம் சாத்ரா புறநகர் பகுதியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் இருந்த எஸ்.பி.ஐ. வங்கியின் ஏடிஎம்மை கொள்ளையர்கள் அப்படியே தூக்கி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏடிஎம் கடந்த இரண்டு நாட்களாக இன்டர்நெட் தொடர்பு இல்லாமல் இருந்து உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏடிஎம்மில் பாதுகாவலர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை. இதுதொடர்பாக விசாரித்து வரும் போலீஸ், குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகிறது.