தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இந்து கடவுள் ராமரின் மற்றொரு அவதாரம்! பா.ஜனதா எம்.எல்.ஏ. சொல்கிறார் + "||" + Modi reincarnation of Lord Ram BJP MLA

பிரதமர் மோடி இந்து கடவுள் ராமரின் மற்றொரு அவதாரம்! பா.ஜனதா எம்.எல்.ஏ. சொல்கிறார்

பிரதமர் மோடி இந்து கடவுள் ராமரின் மற்றொரு அவதாரம்! பா.ஜனதா எம்.எல்.ஏ. சொல்கிறார்
பிரதமர் மோடி இந்து கடவுள் ராமரின் மற்றொரு அவதாரம் என பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறி உள்ளார். #PMModi
பாலியா,

உத்தரபிரதேச மாநிலம் பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் பேசுகையில், பிரதமர் மோடி இந்து கடவுள் ராமரின் அவராதம், ராம ராஜியத்தை அமைக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற அவருக்காக அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத்தை அனுப்பி உள்ளார் என கூறிஉள்ளார்.

பா.ஜனதா தலைவர் அமித் ஷாவை ராமரின் தம்பி லட்சுமணன் என்றும் யோகி ஆதித்யநாத்தை அனுமான் என்றும் குறிப்பிட்டு உள்ளார். விரைவில் இந்தியா முழுவதும் ராம ராஜியத்தை அமைக்க மோடிக்கு அமித்ஷாவும், யோகி ஆதித்யநாத்தும் உதவுவார்கள் என்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறி உள்ளார். 

 பா.ஜனதாவின் எம்.எல்.ஏ. சுரேந்திரசிங் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை பதிவு செய்வது இது ஒன்றும் புதியது கிடையாது.

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என அவர் கூறியது சர்ச்சையாகியது. பொறுப்பற்ற வகையில் பேசக்கூடாது என பிரதமர் மோடி எச்சரிக்கையை விடுத்த நிலையிலும் பா.ஜனதாவினர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்கள். 

பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்புக்கு பெற்றோர்கள்தான் காரணம் என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. ‘இந்த பிரதமரின் கீழ்...’ சி.பி.ஐ. அதிகாரிகள் இடையிலான யுத்தம் விவகாரத்தில் மோடியை கடுமையாக சாடிய ராகுல்
சி.பி.ஐ. அதிகாரிகள் இடையிலான யுத்தம் விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
2. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு
சிபிஐ மேலிட பனிப்போரில் தலையிட்டுள்ள பிரதமர் மோடி இரு உயர் அதிகாரிகளுக்கு சம்மன் விடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
3. இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுத்தால் ‘இரு மடங்கு பலத்துடன் பதிலடி’ பிரதமர் மோடி எச்சரிக்கை
எந்த நாட்டின் மண்ணையும் அபகரிக்கும் எண்ணம் இல்லை என்றும், இந்தியாவின் இறையாண்மைக்கு யாராவது சவால் விடுத்தால் இரு மடங்கு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
4. பிரதமர் மோடி, ரனில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயும் டெல்லி ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினர்.
5. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பிரதமர் மோடி பொய் பேசுகிறார் - அசோக் சவான் குற்றச்சாட்டு
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பிரதமர் மோடி பொய் பேசுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறினார்.