தேசிய செய்திகள்

என்னை கொல்ல அரசியல் கட்சி சதிதிட்டம் - மம்தா பானர்ஜி பரபரப்பு பேட்டி + "||" + Political party conspiring to kill me Mamata

என்னை கொல்ல அரசியல் கட்சி சதிதிட்டம் - மம்தா பானர்ஜி பரபரப்பு பேட்டி

என்னை கொல்ல அரசியல் கட்சி சதிதிட்டம் - மம்தா பானர்ஜி பரபரப்பு பேட்டி
என்னை கொல்ல அரசியல் கட்சி திட்டமிட்டு உள்ளது என மம்தா பானர்ஜி கூறிஉள்ளார். #MamataBanerjee

கொல்கத்தா,

பெங்காலி செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசிஉள்ள மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி என்னை கொலை செய்ய அரசியல் கட்சி சதிதிட்டம் தீட்டி உள்ளது என குற்றம் சாட்டிஉள்ளார். ஆனால் எந்த கட்சி எந்தஒரு அடையாளத்தையும் அவர் வெளியிடவில்லை.

முதலில் ஒருவருடைய கேரக்டரை படுகொலை செய்து, பின்னர் அவரை தீர்க்க வேண்டும் என்ற முறையில் நடக்கிறது. 

“நான் மரணத்திற்கு பயப்படுபவள் கிடையாது.. என்னை கொலை செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டது,” என குறிப்பிட்டு உள்ளார். 

“அரசியல் கட்சி என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டிஉள்ளது என்பது எனக்கு தெரியும். என்னை கொலை செய்யும் பணி கொடுக்கப்பட்டு உள்ள நபர்கள் என்னுடைய வீடு, அலுவலகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளை எல்லாம் உளவு பார்த்துவிட்டார்கள். ஏற்கனவே அரசியலில் எதையும் எதிர்க்கொள்ள தயாராகிவிட்டேன், எனக்கு எதிரான சதிதிட்டத்தால் என்னுடைய கட்சியை பிரச்சனையை சந்திக்க செய்ய முடியாது,” என கூறிஉள்ளார் மம்தா பானர்ஜி.

பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் மற்றும் உளவுத்துறை வீட்டை மாற்றுமாறு எனக்கு அறிவுரையை வழங்கி உள்ளது எனவும் மம்தா பானர்ஜி கூறிஉள்ளார். என்னுடைய மக்கள் நான் விரும்புகிறேன், அவர்களின் வளர்ச்சிக்காக நான் பணியாற்றுவேன், என்னை யாரும் மிரட்டவும் முடியாது, மக்களுக்கான என்னுடைய பணியை தடுக்கவும் முடியாது என மம்தா பானர்ஜி கூறிஉள்ளார்.