கற்பழிக்கப்படும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு: சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்


கற்பழிக்கப்படும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு: சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்
x
தினத்தந்தி 11 May 2018 10:15 PM GMT (Updated: 11 May 2018 8:47 PM GMT)

கற்பழிக்கப்படும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி, 

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான நஷ்டஈடு வழங்கப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுகிய தேசிய சட்ட சேவை ஆணையம் இதற்காக பல்வேறு கட்ட தொகைகளையும் பரிந்துரைத்தது. இந்த திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஒப்புதல் அளித்தது.

இந்த புதிய விதிப்படி கூட்டு கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நஷ்டஈடாக கிடைக்கும். மேலும் வழக்கத்துக்கு மாறான பாலியல் தாக்குதல்கள் மற்றும் கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்கள் குறைந்தபட்சம் ரூ.4 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை நஷ்டஈடு பெற முடியும்.

இதைப்போல திராவக வீச்சுக்கு ஆளாகும் பெண்களுக்கும் நஷ்டஈடு வரையறுக்கப்பட்டு உள்ளது. அதன்படி 50 சதவீதத்துக்கு அதிகமான காயத்துக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரை நஷ்டஈடு வழங்கப்படும். தீ வைத்து எரிக்கப்படும் பெண்களுக்கும் இந்த வரையறை பொருந்தும் என அறிவித்த நீதிபதிகள், இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Next Story