தேசிய செய்திகள்

ரெயில் நிலையத்தில் திடீரென பின் திசையில் இயங்கிய எஸ்கலேட்டர்; 3 பேர் காயம் + "||" + Escalator malfunctions, moves in `reverse direction'; 3 hurt

ரெயில் நிலையத்தில் திடீரென பின் திசையில் இயங்கிய எஸ்கலேட்டர்; 3 பேர் காயம்

ரெயில் நிலையத்தில் திடீரென பின் திசையில் இயங்கிய எஸ்கலேட்டர்; 3 பேர் காயம்
மகாராஷ்டிராவில் தானே ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் ஒன்று பின் திசையில் இயங்கிய நிலையில் அதில் நின்றிருந்த 3 பேர் காயமடைந்து உள்ளனர்.

மும்பை,

மகாராஷ்டிராவில் தானே ரெயில் நிலையத்தின் ஒன்றாம் நடைமேடையில் எஸ்கலேட்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது.  ரெயில் பயணிகளில் சிலர் அதில் நின்றிருந்த நிலையில் திடீரென அது பின் திசையில் இயங்கி உள்ளது.  இதனால் நிலைகுலைந்து அவர்கள் கீழே விழுந்தனர்.

இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் குல்தீப் வாரே, தேஜாஸ்ரீ மிஷ்ரா மற்றும் சுனில் தாகூர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  இதனை தொடர்ந்து பராமரிப்பிற்காக அந்த எஸ்கலேட்டர் வழி மூடப்பட்டு உள்ளது.