தேசிய செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல்: 11 மணிநேர நிலவரப்படி 24 சதவீத வாக்குகள் பதிவு + "||" + Karnataka Assembly elections recorded 11 percent of the vote, with 24 percent votes cast

கர்நாடக சட்டசபை தேர்தல்: 11 மணிநேர நிலவரப்படி 24 சதவீத வாக்குகள் பதிவு

கர்நாடக சட்டசபை தேர்தல்: 11 மணிநேர நிலவரப்படி 24 சதவீத வாக்குகள் பதிவு
கர்நாடக சட்டசபை தேர்தலில் 11 மணிநேர நிலவரப்படி 24 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. #KarnatakaElections2018
பெங்களூரு,

கர்நாடகாவில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் தொடங்கியது.  இதில் வாக்காளர்கள் வரிசையில் வந்து வாக்களித்து வருகின்றனர்.

தேர்தல் நடைபெறும் 222 தொகுதிகளிலும் சுமார் 2,600 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவின் முதல் அமைச்சர் வேட்பாளரான எடியூரப்பா ஷிமோகா அருகே ஷிகர்பூரில் வாக்களித்து உள்ளார்.  இதேபோன்று மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் முதல் அமைச்சரான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்து உள்ளார்.

இதேபோன்று முன்னாள் பிரதமர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா, தனது மனைவி மற்றும் மகனுடன் ஹசன் மாவட்டத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்து உள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.  காலை 11 மணி நிலவரப்படி 24 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.  தொடர்ந்து வாக்கு பதிவு நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 15ந்தேதி எண்ணப்படுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் எடியூரப்பா சொல்கிறார்
நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி உள்ளார்.
2. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வி ஏன்? - சித்தராமையா செய்த இரண்டு தவறுகள்...!
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வி ஏன்?என கேள்வி எழுந்துள்ளது.
3. கர்நாடக சட்டசபை தேர்தல்: 16 மந்திரிகள் தோல்வியை தழுவினர்
கர்நாடக சட்டசபை தேர்தலில் 16 மந்திரிகள் தோல்வியை தழுவி உள்ளனர்.
4. கர்நாடகா ஆளுநர் மாளிகைக்குள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணிவகுப்பாக செல்ல அனுமதி மறுப்பு
கர்நாடகாவில் ஆளுநர் மாளிகைக்குள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணிவகுப்பாக செல்ல அனுமதி மறுக்கபட்டது. #KarnatakaElections2018
5. மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால், குதிரைபேரம் நடக்க வாய்ப்பு உள்ளது- குலாம் நபி ஆசாத்
மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால், குதிரைபேரம் நடக்க வாய்ப்பு உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார். #KarnatakaElections2018