தேசிய செய்திகள்

கடவுளின் சாபம் 400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத கிராமம் + "||" + Is Poonam Kaur Targeting Trivikram?

கடவுளின் சாபம் 400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத கிராமம்

கடவுளின் சாபம் 400 ஆண்டுகளாக பிரசவம்  நடக்காத கிராமம்
கடவுளின் சாபம் காரணமாக கடந்த 400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத கிராமம் மத்திய பிரதேசத்தில் உள்ளது.

போபால்:

மத்திய பிரதேசத்தில் சங்கா ஷியாம் ஜி கிராமத்திற்குள்  கடவுளின் சாபம் காரணமாக 400 ஆண்டுகளாக பிரசவம் நடப்பதில்லை. அவ்வாறு நடந்தால் குழந்தையோ அல்லது தாயோ மரணமடைவார் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

ராஜ்கார் மாவட்டத்தில் உள்ளது சங்கா ஷியாம் ஜி கிராமம். இந்த கிராமத்தில் 400 ஆண்டுகளாக பெண்களுக்கு பிரசவமே நடப்பதில்லை என்று கூறப்படுகிறது. அவசர காலங்களில் இந்த கிராம எல்லைக்கு வெளியே ஒரு மண்டபத்தில் பிரசவம் நடப்பதாக கூறப்படுகிறது. அதற்கு என அங்கு ஒரு கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

இந்த வினோதமான நடைமுறை குறித்து அந்த ஊர் பெரியவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

 கடந்த 400 ஆண்டுகளாக எங்கள் ஊரில் வைத்து பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதில்லை. அவ்வாறு பார்த்தால் குழந்தை ஊனமாகவோ அல்லது குழந்தை அல்லது தாய் இறப்போ நேரிடும் என்பது எங்கள் நம்பிக்கை.

16- வது நூற்றாண்டில் எங்கள் கிராமத்தில் ஒரு கோயில் கட்டும் பணிகள் நடந்து வந்தது. அப்போது ஒரு பெண்ணால்  பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அந்த கடவுள் சாபமிட்டதாகவும் அது முதல் அங்கு பிறக்கும் குழந்தைகள் இறந்துவிடுவதாகவும் நம்பப்படுகிறது.

கடவுள் சாபம் குறித்து எந்த குறிப்புகளும் இல்லை. எனினும் எங்கள் மூதாதையர்கள் வாய்மொழியாக சொன்னதுகேற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று அந்த ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர்.