தேசிய செய்திகள்

ஒரே வாரத்தில் 3-வது சம்பவம்: பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி எரித்துக் கொலை + "||" + Third Teen Raped And Burnt Alive In One Week. This Time In Madhya Pradesh

ஒரே வாரத்தில் 3-வது சம்பவம்: பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி எரித்துக் கொலை

ஒரே வாரத்தில் 3-வது சம்பவம்: பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி எரித்துக் கொலை
மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். ஜார்கண்ட் மாநிலத்திலும் இது போல் 2 சம்பவங்கள் நடந்து உள்ளது ஒரே வாரத்தில் நடந்த 3 வது சம்பவம் இதுவாகும்.
புதுடெல்லி

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் 16 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார். கடந்த  ஒருவாரத்தில் இது 3 வது  சம்பவமாகும். சாகர் மாவட்டம் ஜுகர்பூர் கிராமத்தில் வீட்டில் சிறுமி தனியாக இருந்து உள்ளார். 26 வயது வாலிபர் இருவர் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் மண்ணெண்ணை ஊற்றி சிறுமி மீது தீவைத்து உள்ளான். 

குற்றாவாளி குறித்து அடையாளம் தெரிய வந்து உள்ளது அவனது பெயர்  ரவிசத்தார்.

இது குறித்து போலீசார் கூறும் போது இது குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ளோம். "இரண்டு குற்றவாளிகளை நாங்கள் கைது செய்துள்ளோம், அவர்களில் ஒருவர், வீட்டில் தனியாக இருப்பதாக பிரதான குற்றாவாளியிடம்  தகவல் தெரிவித்த பெண் உறவினர் ஆவார் என கூறினார்.

சம்பவம் நடந்த கிராமம் மாநில உள்துறை அமைச்சர்  பூபேந்திர சிங்கின் சொந்த தொகுதியாகும். சம்பவம் குறித்து அறிந்ததும் பூபேந்திர சிங் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்.  இத்தகைய சம்பவங்கள் எழுச்சிக்கு "துன்பகரமான" மற்றும் "ஆபாசமானது என குற்றம் சாட்டினார்.

இதே போல் ஜார்கண்ட் மாநிலத்திலும் 2 சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது.