தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசம்; பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 7 பேர் பலி + "||" + Himachal Pradesh: 7 killed as bus falls into gorge in Shimla

இமாச்சல பிரதேசம்; பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 7 பேர் பலி

இமாச்சல பிரதேசம்; பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 7 பேர் பலி
இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாயினர். #ShimlaBusAccident
சிம்லா,

இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சோலான் மாவட்டத்தில் மன்னவ் எனும் இடத்தில் இருந்து இன்று ராஜ்கார் நோக்கி சென்ற பேருந்தானது சோலான்-ராஜ்கார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நயி-நேட்டி அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.


இதில், பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை பள்ளத்தாக்கில் இருந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கிரீஸ்: அகதிகளை ஏற்றி வந்த கார் விபத்து - 11 பேர் பலி
கிரீஸ் நாட்டில் அகதிகளை ஏற்றி வந்த கார் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் 11 பேர் பலியாயினர்.
2. மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்: தம்பதி உள்பட 4 பேர் காயம்
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி கார் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் தம்பதி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
3. திருச்சி விமான விபத்து: மத்திய குழுவினர் நாளை விசாரணை
திருச்சி விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மத்திய குழுவினர் நாளை வருகிறார்கள்.
4. அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார், ஹைடன்
அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் விபத்தில் சிக்கினார்.
5. சாலையோர பள்ளத்தில் பாய்ந்து அந்தரத்தில் தொங்கிய பஸ்
மும்பை - புனே நெடுஞ்சாலையோர பள்ளத்தில் பாய்ந்த பஸ் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. அடர்ந்து நின்ற மரங்களால் அதில் இருந்த பயணிகள் 50 பேர் உயிர் தப்பினர்.