தேசிய செய்திகள்

மும்பையில் பாக். பயங்கரவாதிகள் தாக்குதல்: நவாஸ் ஷெரீப் கூறியது பற்றி நிர்மலா சீதாராமன் கருத்து + "||" + "Proves India's Stand": Nirmala Sitharaman On Nawaz Sharif's 26/11 Remark

மும்பையில் பாக். பயங்கரவாதிகள் தாக்குதல்: நவாஸ் ஷெரீப் கூறியது பற்றி நிர்மலா சீதாராமன் கருத்து

மும்பையில் பாக். பயங்கரவாதிகள் தாக்குதல்: நவாஸ் ஷெரீப் கூறியது பற்றி நிர்மலா சீதாராமன் கருத்து
மும்பையில் பாக். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து நவாஸ் ஷெரீப் கூறியுள்ளதன் மூலம் இந்தியாவின் நிலைப்பாடு எப்போதுமே சரியாகத்தான் இருக்கும் என்பது நிரூபணமாகி உள்ளது என நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதாக கூறியுள்ளது குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “இது மிகவும் தீவிரமான வெளிப்பாடு. மும்பை தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டு அங்கு இருந்துவந்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு. தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நவாஸ் ஷெரீப் கூறியுள்ளதன் மூலம் இந்தியாவின் நிலைப்பாடு எப்போதுமே சரியாகத்தான் இருக்கும் என்பது நிரூபணமாகி உள்ளது” என்றார்.