மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை


மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 14 May 2018 7:35 AM GMT (Updated: 14 May 2018 7:35 AM GMT)

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி, இன்று காலை 8 மணிக்கு  ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அருண் ஜெட்லி, கடந்த ஒரு மாதமாக டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அடுத்த வாரம் லண்டனில் நடைபெற உள்ள இந்தியா -இங்கிலாந்து பொருளாதார  நிதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்க முடியாது என கூறி  பயணதிட்டத்தை ரத்து செய்தார். கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அருண்ஜெட்லி  தனக்கு உடல்நிலை  கோளாறு இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். 

அருண் ஜெட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு, நீரிழிவு நோய் பாதிப்புக்காக உடல் எடை குறைப்பதற்காக அருண் ஜெட்லி அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதேபோல், பல ஆண்டுகளுக்கு முன்பு  இருதய அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு இருக்கிறார் என்பது நினைவு கூறத்தக்கது. 


Next Story