பரீட்சைக்கு வந்த மாணவிகளின் ஆடைகளை வெட்டிய தேர்வு அதிகாரிகள் பள்ளி மீது ஒழுங்கு நடவடிக்கை


பரீட்சைக்கு வந்த மாணவிகளின் ஆடைகளை வெட்டிய  தேர்வு அதிகாரிகள் பள்ளி மீது ஒழுங்கு நடவடிக்கை
x
தினத்தந்தி 14 May 2018 10:03 AM GMT (Updated: 14 May 2018 10:03 AM GMT)

பரீட்சைக்கு வந்த மாணவிகளின் ஆடைகளை வெட்டிய தேர்வு அதிகாரிகள் பள்ளி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

பாட்னா

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில்  பரீட்சை எழுத வந்த மாணவிகள் அணிந்து இருந்த ஆடைகளை வெட்டிய பள்ளி மீது  நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. தேர்வு எழுதிய  பொதுப் பள்ளியில் தேர்வு அறையின் அதிகாரிகள்  கத்திரிகோல் மூலம் மாணவிகளின் ஆடைகளை வெட்டுவது காட்டப்பட்டு உள்ளது.  சனிக்கிழமை அன்று நடந்த இந்த சம்பவம் குறித்த காட்சி உள்ளூர் வட்டார சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது, இது உள்ளூர் மக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கோபத்தை கொடுத்தது.

பீகார் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுப் பரீட்சை வாரியம் (BCECEB) நடத்திய நர்சிங் நுழைவு தேர்வில்  நடந்தது, மாணவிகள்   முழுக்கை  ஆடைகள் எதுவும் அணியக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்களில் சிலர் நெறியை கடைப்பிடிக்க தவறிவிட்டனர், மாவட்ட கல்வி அதிகாரி லலன் பிரசாத் சிங் கூறினார்.

கல்வித்துறை இந்த சம்பவம் தொடர்பாக ஒரு விசாரணையை மேற்கொண்டதுடன் எதிர்காலத்தில் அந்த பள்ளிகூடத்தில்  தேர்வுகள் நடத்துவதை  தடை செய்தது.

Next Story