தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர், சான்ட் ரவிதாஸ் சிலைகள் உடைப்பு + "||" + Ambedkar, Sant Ravidas statues found damaged in Ballia distt

உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர், சான்ட் ரவிதாஸ் சிலைகள் உடைப்பு

உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர், சான்ட் ரவிதாஸ் சிலைகள் உடைப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் மற்றும் சான்ட் ரவிதாஸ் சிலைகள் மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. #UPStatuesDamage
பலியா, 

உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தின் மாஜ்ஹோவா கிராமத்தில் உள்ள அம்பேத்கர் மற்றும் சான்ட் ரவிதாஸ் ஆகியோர்களின் சிலை மர்மநபர்களால் தேசப்படுத்தப்பட்டுள்ளது. சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக மாஜ்ஹோவா கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் கத்வார் காவல்நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து கத்வார் காவல் நிலைய அதிகாரி ராம் சிங் கூறுகையில், ”மாஜ்ஹோவா கிராமத்தில் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும் சிலைகளை புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வரும் நிலையில், சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்” எனக் கூறினார்.

இதனிடையே உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தலைவர்களின் சிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்படுவது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.