தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி மறுப்பு; 12 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை + "||" + Not allowed to use motorcycle, UP boy commits suicide

மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி மறுப்பு; 12 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை

மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி மறுப்பு; 12 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை
உத்தர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி மறுத்ததற்காக 12 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் சாம்லி மாவட்டத்தில் கந்த்லா நகரில் வசித்து வந்த 12 வயது சிறுவனின் வீட்டில் மோட்டார் சைக்கிள் இருந்துள்ளது.  இதனை ஓட்ட அனுமதிக்கும்படி குடும்பத்தினரிடம் கேட்டு உள்ளான்.

ஆனால் சிறுவனான அவனை மோட்டார் சைக்கிளை பயன்படுத்த கூடாது என கூறி குடும்பத்தினர் தடுத்து விட்டனர்.

இந்நிலையில், வீட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் அவனது உடலை போலீசார் கைப்பற்றினர்.  மன வருத்தத்தில் இருந்த அந்த சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான் என குடும்பத்தினர் கூறினர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.