தேசிய செய்திகள்

எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் 35 ஆயிரத்து 397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + BJP CM Candidate BS Yeddyurappa wins from Shikaripura seat by 35,397 votes

எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் 35 ஆயிரத்து 397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் 35 ஆயிரத்து 397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பாரதீய ஜனதா முதல் மந்திரி வேட்பாளர் எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் 35 ஆயிரத்து 397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். #Yeddyurappa
பெங்களூரு,

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. 

இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டு இருந்தன.  அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

இதில், தொடக்கத்தில் இருந்து பாரதீய ஜனதா கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.  இந்நிலையில், ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் முதல் மந்திரி வேட்பாளரான எடியூரப்பா 35 ஆயிரத்து 397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.