தேசிய செய்திகள்

கர்நாடக தேர்தல் வெற்றியை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என என்சிபி வலியுறுத்தல் + "||" + BJP s victory in Karnataka unbelievable NCP

கர்நாடக தேர்தல் வெற்றியை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என என்சிபி வலியுறுத்தல்

கர்நாடக தேர்தல் வெற்றியை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என என்சிபி வலியுறுத்தல்
கர்நாடக மாநில தேர்தல் வெற்றியை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என என்சிபி வலியுறுத்தி உள்ளது. #KarnatakaElections2018 #BJP
மும்பை, 

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்றதை நம்ப முடியவில்லை என கூறிஉள்ள தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), தேர்தல் முடிவானது மாநிலத்தில் மக்கள் மத்தியில் நிலவும் சூழ்நிலையுடன் ஒத்திசையவில்லை என குற்றம் சாட்டிஉள்ளது.

224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு 12-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா 104 இடங்களில் முன்னிலை பெற்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை 112-ஐ எட்டவில்லை. இதற்கிடையே காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது. தேர்தல் வெற்றியை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என என்சிபி வலியுறுத்தி உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு சிறப்பாகவே செயல்பட்டது, அங்கு சித்தராமையா அரசுக்கு எதிரான நிலைப்பாடு தென்படவில்லை. இப்போது பாரதீய ஜனதா வெற்றி சூழ்நிலையானது மிகவும் நம்பமுடியாததாக உள்ளது. மக்களின் மத்தியில் நிலவும் சூழ்நிலைக்கும், இப்போது வெளியாகி உள்ள முடிவுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பாரதீய ஜனதா மற்றும் அதன் முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா மீதான பார்வை சரியானதாக இல்லை. கர்நாடகாவில் பாரதீய ஜனதாவின் வளர்ச்சியானது வரையறுக்கப்பட்டது, அப்படியிருக்கையில் இந்த முடிவை ஆய்வு செய்ய வேண்டும், என கூறிஉள்ளார். 

சந்தேகங்களை தீர்க்க தேர்தல் ஆணையம் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் மேற்கொள்ள வேண்டும், காலதாமதம் ஏற்படலாம் ஆனால் சந்தேகங்கள் தீர்க்கப்படும், இதனை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என கூறிஉள்ளார் ஜெயந்த் படேல்.


தொடர்புடைய செய்திகள்

1. சிபிஐ, அமலாக்கப்பிரிவு அழுத்தம் காரணமாகவே மாயாவதி அஜித் ஜோகியுடன் கூட்டணி - காங்கிரஸ்
மாயாவதி மற்றும் அஜித் ஜோகியின் கூட்டணிக்கு பா.ஜனதாவின் ஆதரவு உள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது.
2. எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டை கண்டித்து எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
3. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிற கட்சியினரை விமர்சனம் செய்ய வைக்கிறது -தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிற கட்சியினரை விமர்சனம் செய்ய வைக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். #TamilisaiSoundararajan
4. ரபேல் விவகாரம்: விசாரணை நடத்தக்கோரி சிஏஜியிடம் முறையிட காங்கிரஸ் முடிவு
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக்கோரி சிஏஜியிடம் காங்கிரஸ் இன்று மனு அளிக்க உள்ளது.
5. மும்பையின் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை
மராட்டியத்தின் 15-வது நிதி கமிஷனில் மும்பையின் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.