இந்திய இராணுவம் உத்தராகண்டத்தில் பனிச்சரிவுகளை அகற்றும் பணிகளை தொடங்கின


இந்திய இராணுவம் உத்தராகண்டத்தில் பனிச்சரிவுகளை அகற்றும் பணிகளை தொடங்கின
x
தினத்தந்தி 15 May 2018 12:35 PM GMT (Updated: 15 May 2018 12:35 PM GMT)

உத்தராகண்ட மாநிலத்தில் பனிச்சரிவு அகற்றும் பணிகளை இந்திய இராணுவத்தினா் தொடங்கியுள்ளனா். #IndianArmy #Snowclearing

உத்தராகண்டம், 

இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் ஒன்றான உத்தராகண்டத்தில் பனிப்பொழிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்திய இராணுவத்தின் பொறியாளர்கள் சமோலி மாவட்டத்தில் சீக்கிய புனித யாத்திரையான ஹேமகுண்டம் சாஹிப் செல்லும் பாதையில் உள்ள பனிகளை சீர்திருத்தகள் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

பின்னா் இந்த புனித ஹேமகுண்டம் சாஹிப் மே 25-ல் திறக்க உள்ள நிலையில்,அந்த பாதையில் பனிகள் மூன்று முதல் நான்கு அடி வரையிலும் கீழ் படா்ந்திருந்தது. ஆனால் ஏப்ரல் 25 முதல் பனித்துப்புரவு நடவடிக்கை தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் இந்திய இராணுவத்தின் உள்ள 40 இளைய பொறியாளா்கள் ஈடுப்படுத்தியுள்ளனா்.

இந்நிலையில் இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு உத்தராகண்டத்தின் முன்னாள் முதல்வா் ஹரீஷ் ராவத்தும் காங்கிரஸ் தலைவரும் கேதர்நாத்தில் உள்ள ஒரு பகுதியில் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி கொண்டது கூறிப்பிடதக்கது,

Next Story