தேசிய செய்திகள்

வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை சந்திக்க தயாரா பா.ஜனதாவிற்கு சிவசேனா சவால் + "||" + Karnataka election results BJP should hold polls with ballot papers, says Uddhav Thackeray

வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை சந்திக்க தயாரா பா.ஜனதாவிற்கு சிவசேனா சவால்

வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை சந்திக்க தயாரா பா.ஜனதாவிற்கு சிவசேனா சவால்
வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை சந்திக்க தயாரா என பா.ஜனதாவிற்கு சிவசேனா சவால் விடுத்து உள்ளது. #UddhavThackeray

மும்பை,


கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இதனை பா.ஜனதாவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிவசேனா விமர்சனம் செய்து உள்ளது.

அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், இடைத்தேர்தல்களில் பாரதீய ஜனதா தோல்வி அடைவதை சுட்டிக்காட்டினார். 

“பாரதீய ஜனதாவிற்கு தன்மீது நம்பிக்கையிருந்தால் தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும். அதிகமான மக்கள் இதற்கான கோரிக்கையை விடுத்து வருகிறார்கள், அதன் மூலமாகவே வாக்குப்பதிவு இயந்திர சந்தேகத்தை தெளிவு செய்ய முடியும்,” என கூறிஉள்ளார். 

சில நேரங்களில் நீங்கள் வெற்றி பெறலாம், சில நேரங்களில் நீங்கள் தோல்வியடையாலாம், ஆனால் தொடர்ந்து நம்முடைய பணியை சிறப்பாக செயய் வேண்டும் என ராகுல் காந்திக்கு அட்வைஸ் வழங்கி உள்ளார் உத்தவ் தாக்கரே. 
   
கர்நாடக தேர்தல் பாரதீய ஜனதாவின் வெற்றி கிடையாது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வெற்றி என நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே விமர்சனம் செய்து உள்ளார்