தேசிய செய்திகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் எறிகுண்டு வீச்சு; போலீசார் பதிலடி + "||" + Terrorists hurled a grenade towards Police station in Pulwama's Rajpora; Police retaliated

ஜம்மு மற்றும் காஷ்மீரில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் எறிகுண்டு வீச்சு; போலீசார் பதிலடி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் எறிகுண்டு வீச்சு; போலீசார் பதிலடி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் ராஜ்போரா பகுதியில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் எறிகுண்டு வீசியுள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராஜ்போரா பகுதியில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது.  அதன் மீது தீவிரவாதிகள் சிலர் எறிகுண்டு ஒன்றை வீசியுள்ளனர்.  ஆனால் அது இலக்கை தாக்காமல் காவல் நிலையத்திற்கு வெளியே விழுந்து வெடித்துள்ளது.

இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்த போலீசார் உடனடியாக தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர்.  அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி தீவிரவாதிகளை விரட்டியடித்தனர்.