தேசிய செய்திகள்

சட்டீஸ்காரில் குஷாபாவ் தாக்ரே பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பங்கேற்பு + "||" + Vice President to attend journalism university convocation

சட்டீஸ்காரில் குஷாபாவ் தாக்ரே பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பங்கேற்பு

சட்டீஸ்காரில் குஷாபாவ் தாக்ரே பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
சட்டீஸ்காரில் குஷாபாவ் தாக்ரே பல்கலை கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார். #VenkaiahNaidu

ராய்பூர்,

சட்டீஸ்காரில் குஷாபாவ் தாக்ரே பத்திரிகை மற்றும் மாஸ் கம்யூனிகேசன் பல்கலை கழகம் அமைந்துள்ளது.  இங்கு நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார்.

இதுபற்றி பல்கலை கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, துணை குடியரசு தலைவர் பட்டமளிப்பு உரையை ஆற்றுவார்.  இந்த விழாவில், 19 மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்படும்.  அதேவேளையில் எம்.பில் படித்த 23 மாணவர்கள், 122 முதுநிலை மாணவர்கள் மற்றும் 104 இளநிலை மாணவர்கள் ஆகியோருக்கு பட்டங்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த விழாவில் சட்டீஸ்கார் முதல் மந்திரியான ராமன் சிங் கலந்து கொண்டு தலைமை வகிக்கிறார்.