தேசிய செய்திகள்

ஆந்திராவில் மீண்டும் படகு விபத்து பெண்கள், குழந்தைகள் உள்பட 33 பேரின் கதி என்ன? + "||" + Boat accident in Andhra again What is the fate of 33 people including women and children?

ஆந்திராவில் மீண்டும் படகு விபத்து பெண்கள், குழந்தைகள் உள்பட 33 பேரின் கதி என்ன?

ஆந்திராவில் மீண்டும் படகு விபத்து பெண்கள், குழந்தைகள் உள்பட 33 பேரின் கதி என்ன?
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா படகு தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. எனினும் அதில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நகரி,

கோதாவரி ஆற்றில் தேவிபட்டினத்தில் இருந்து மாடப்பள்ளி செல்லும் ஒரு படகில் போலாவரம் பகுதியை சேர்ந்த ஆதிவாசிகள் 40 பேர் நேற்று மாலை பயணம் செய்தனர். அப்போது சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதனால் அந்த படகு தள்ளாடியது.

ஏற்கனவே தீ விபத்து நடந்த பகுதியில் அந்த படகு திடீரென கவிழ்ந்தது. அப்போது படகில் இருந்த 7 ஆண்கள் மட்டும் கரைக்கு நீந்தி வந்தனர். படகில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 33 பேரின் நிலை என்ன ஆனது? என்று தெரியவில்லை.

இது பற்றி தகவல் அறிந்த ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு உடனடியாக மீட்பு பணி நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து 22 படகுகளில் மீட்பு படையினர் சென்று மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பலத்த காற்று, மழையால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 19 பேர் பலி
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாகினர்.
2. அம்மாபேட்டை பகுதியில் 150 ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்காமல் பணியாளர்கள் புறக்கணிப்பு
விபத்தில் ஊழியர் இறந்ததை கண்டித்து அம்மாபேட்டை பகுதியில் உள்ள 150 ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்காமல் பணியாளர்கள் பணியை புறக்கணித்தனர்.
3. குளச்சலில் குடோனில் தீ விபத்து
குளச்சல் துறைமுகம் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சொந்தமான தோட்டம் சைமன்காலனியில் உள்ளது. இந்த தோட்டத்தில் மீன்பெட்டிகளை அடுக்கி வைப்பதற்கான குடோன் உள்ளது. நேற்று அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
4. 5 படகுகள் எரிந்து நாசம் கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து
கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 படகுகள் எரிந்து நாசமானது.
5. திருச்சி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு 1,564 சாலை விபத்து வழக்குகள் பதிவு குண்டர் சட்டத்தில் 37 பேர் மீது நடவடிக்கை
திருச்சி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு 1,564 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் 37 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.