தேசிய செய்திகள்

வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலி + "||" + The newly constructed flyover collapse kills 30 in Varanasi

வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலி

வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலி
வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர். #Varanasi #FlyoverCollapses

வாரணாசி,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த மேம்பாலத்தின் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மற்றும் மேம்பாலம் அருகே நின்றவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்து உள்ளனர். மேலும் ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

மேம்பால இடிபாடுகளில் பஸ்– கார் போன்ற ஏராளமான வாகனங்களும் சிக்கி சேதம் அடைந்து உள்ளன.

தனது சொந்த தொகுதியில் நடந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் பிரதமர் நரேந்திரமோடி தனது அனுதாபத்தை தெரிவித்து உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் விளையாட்டு வினையானது: கத்திரிக்கோல் நெஞ்சில் குத்தியதில் சிறுவன் சாவு, அண்ணன் கைது
திருப்பூரில் கத்திரிக்கோலை கையில் வைத்து சுற்றி விளையாடியபோது தவறி விழுந்ததில் சிறுவனின் நெஞ்சில் குத்தியதில் பரிதாபமாக இறந்தான். இதைத்தொடர்ந்து அவனுடைய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
2. குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி; மகள் சாவு
குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயன்றார். இதில் மகள் பரிதாபமாக இறந்தார். மகனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
3. குமரி மாவட்டத்தில் 13 பேருக்கு பன்றி காய்ச்சல் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரி நியமனம்
குமரி மாவட்டத்தில் 13 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த காய்ச்சலை கண்காணித்து கட்டுப்படுத்த சிறப்பு சுகாதாரத்துறை அதிகாரியை அரசு நியமித்துள்ளது.
4. மன்னார்குடி அருகே பரிதாபம்: குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
5. கார்–மோட்டார் சைக்கிள் மோதல்; 3 வயது குழந்தை பலி தாய் உள்பட 3 பேர் படுகாயம்
கார்–மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 வயது குழந்தை பலியானது. தாய் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.