தேசிய செய்திகள்

கர்நாடக சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக எடியூரப்பா தேர்வு + "||" + Karnataka, Day 2: BS Yeddyurappa elected as BJP legislative party leader

கர்நாடக சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக எடியூரப்பா தேர்வு

கர்நாடக சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக எடியூரப்பா தேர்வு
சட்டசபை பா.ஜ., தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்.
பெங்களூரு

பெங்களூருவில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளராக மத்திய அமைச்சர்கள், தர்மேந்திர பிரதான், ஜேபி நட்டா, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், சட்டசபை குழு பா.ஜ., தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, எடியூரப்பா மற்றும் பா.ஜ., மூத்த நிர்வாகிகள் கவர்னரை சந்தித்தனர்.

பின்னர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

பாஜகவிற்கு 104 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளோம். விரைவில் முடிவை தெரிவிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.