காவிரி அமைப்பின் முடிவே இறுதியானது மத்திய அரசை அணுகத் தேவையில்லை -சுப்ரீம் கோர்ட்டு


காவிரி அமைப்பின் முடிவே இறுதியானது மத்திய அரசை அணுகத் தேவையில்லை -சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 16 May 2018 7:33 AM GMT (Updated: 16 May 2018 7:57 AM GMT)

காவிரி வாரியத்தின் முடிவே இறுதியானது மத்திய அரசை காவிரி அமைப்பு அணுகத் தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. #CauveryDraftScheme #CauveryCase #SupremeCourt

புதுடெல்லி

காவிரி வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில்  நடைபெற்றது.  வரைவு செயல் திட்டம் தொடர்பாக தமிழகம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்தன.

காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும் என தமிழக அரசு வாதம் செய்தது.

 காவிரி அமைப்பின் தலைவராக  ஓய்வு பெற்ற  நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை  சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

கர்நாடகாவில் அரசு அமைக்கும் முயற்சி நடைபெறுவதால் காவிரி வழக்கை ஜூலைக்கு ஒத்திவைக்க வேண்டும்  என கர்நாடக அரசு தரப்பில் வாதம் செய்தது.

காவிரி மேலாண்மை வாரியம் என அமைப்புக்கு பெயர் வைக்க மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் ஒப்புதல் அளித்து உள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு. மத்திய அரசுக்கு இல்லை.

கர்நாடகாவோ, தமிழகமோ வாரியத்தின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட முடியாது.

நீர்ப் பங்கீடு தொடர்பாக மத்திய அரசை காவிரி அமைப்பு அணுகத் தேவையில்லை. காவிரி வாரியத்தின் முடிவே இறுதியானது.அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும்   என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

காவிரி வரைவு செயல் திட்டத்தில் திருத்தம் செய்து நாளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு  வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Next Story