“நாங்கள் குமாரசாமி அண்ணாவுடனே உள்ளோம்” தலைமறைவானார்கள் என கூறப்பட்ட மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள்


“நாங்கள் குமாரசாமி அண்ணாவுடனே உள்ளோம்” தலைமறைவானார்கள் என கூறப்பட்ட மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள்
x
தினத்தந்தி 16 May 2018 9:10 AM GMT (Updated: 16 May 2018 9:10 AM GMT)

“நாங்கள் குமாரசாமி அண்ணாவுடனே உள்ளோம்” என தலைமறைவானார்கள் என கூறப்பட்ட மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கூறிஉள்ளனர். #KarnatakaElection

பெங்களூரு,

தொங்கு சட்டசபை அமைந்து உள்ள கர்நாடகாவில் முதலிடம் பிடித்த பா.ஜனதாவும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியும் ஆட்சி அமைக்க போராடி வருவதால் அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவீசுகிறது என குமாரசாமி வெளிப்படையாகவே குற்றம் சாட்டிஉள்ளார். இந்நிலையில் தலைமறைவானார்கள் என கூறப்பட்ட மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு தெரிவித்து உள்ளார்கள். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மொத்தம் 38 எம்.எல்.ஏ.க்களில் 36 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என தகவல்கள் வெளியாகியது.

இரண்டு எம்.எல்.ஏ.க்களை காணவில்லை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தலைமறைவானர்கள் என கூறப்பட்ட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் “நாங்கள் குமாரசாமி அண்ணாவுடனே உள்ளோம்” என கூறிஉள்ளனர்.

இதுதொடர்பாக எம்.எல்.ஏ. வெங்கடராவ் நாதகவுடா, தி நியூஸ் மினிட் செய்தி இணையதளத்திற்கு பேட்டியளித்து பேசுகையில், நாங்கள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குதான் செல்கிறோம் என கூறிஉள்ளார். என்னுடைய காருக்கு பின்னாலே எம்.எல்.ஏ. வெங்கடப்பா நாயக் கார் பெங்களூரு நோக்கி வருகிறது என கூறிஉள்ளார். பேட்டியளித்த போது, நாங்கள் இப்போது ஷிகாபாலாபூரில் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். “பிற தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக நாங்கள் பெங்களூரு சென்று கொண்டு இருக்கிறோம், நாங்கள் 450 கிலோ மீட்டர் தொலை பயணம் மேற்கொள்ள வேண்டும் அதனால் காலதாமதம். நாங்கள் குமாரசாமி அண்ணாவுடன் உளோம். அவர் சொல்லும்படி நாங்கள் நடப்போம். 

நாங்கள் இப்போது ஷிகாபாலாபூரில் உள்ளோம். நாங்கள் இருவரும் பெங்களூரு நோக்கி வந்து கொண்டு இருக்கிறோம். நாங்கள் மாயமானோம் என்ற கேள்விக்கே இடம் கிடையாது. நாங்கள் சில மணிநேரங்களில் அங்கு வருவோம். பெங்களூரு டிராபிக் குறித்தும் நாங்கள் எதுவும் சொல்ல முடியாது என வெங்கடராவ் நாதகவுடா கூறிஉள்ளார் என செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 12 மணி நேரங்களில் பாரதீய ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களை அணுகி உள்ளது எனவும் அக்கட்சியின் தகவல்கள் கூறிஉள்ளன. 

Next Story