காஷ்மீரில் ரமலான் மாதத்தில் ஆப்ரேஷன்களை முன்னெடுக்க வேண்டாம் உள்துறை அமைச்சகம் கோரிக்கை


காஷ்மீரில் ரமலான் மாதத்தில் ஆப்ரேஷன்களை முன்னெடுக்க வேண்டாம் உள்துறை அமைச்சகம் கோரிக்கை
x
தினத்தந்தி 16 May 2018 11:41 AM GMT (Updated: 16 May 2018 11:41 AM GMT)

காஷ்மீரில் ரமலான் மாதத்தில் ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து உள்ளது. #MHA



புதுடெல்லி,

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் நடவடிக்கை எடுக்கும் போது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்துகிறார்கள். பாதுகாப்பு படைகள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயமும் நேரிடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பும் நேரிடுகிறது. இந்நிலையில் புனித ரமலான் மாதத்தில் பாதுகாப்பு படைகள் ஆப்ரேஷன்களை எடுக்க வேண்டாம் என பாதுகாப்பு படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து உள்ளது. அமைதியான சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைபிடிக்கும் வகையில், அமைதியை பராமரிக்கும் வகையில் ஆப்ரேஷன்கள் எதையும் முன்னெடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

ரமலான் மாதத்தில் பாதுகாப்பு படைகள் நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பான அறிவிப்பை அம்மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தியிடமும் உள்துறை தெரிவித்து உள்ளது. 


இருப்பினும் தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கவும், அப்பாவி மக்களை பாதுகாக்கவும் பாதுகாப்பு படைக்கு முழு உரிமையும் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story