‘குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு, பா.ஜனதா கண்டனம்


‘குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு, பா.ஜனதா கண்டனம்
x
தினத்தந்தி 16 May 2018 1:55 PM GMT (Updated: 16 May 2018 1:55 PM GMT)

‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ என குற்றம் சாட்டிய சித்தராமையாவிற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. #PMModi #Siddaramaiah


புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாரதீய ஜனதாவும் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.100 கோடி கொடுப்பதாக பா.ஜனதா பேரம் பேசுகிறது என குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார். 

சித்தராமையா பேசுகையில், பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவும் இணைந்து, மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களை இழுக்க குதிரைபேரத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். நாங்கள் ஆட்சி அமைப்பதை தடுக்கிறார்கள்,” என குற்றம் சாட்டினார். ஆளுநர் வாஜுபாய் வாலா முதலில் எங்களை அழைத்துதான் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  சித்தராமையாவின் குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ என்ற சித்தராமையாவின் குற்றச்சாட்டு கண்டனத்திற்குரியது, தவறானது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது, அடிப்படையற்றது என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறிஉள்ளார். 

Next Story