தேசிய செய்திகள்

ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு ‘டுவிட்’ செய்தியை பா.ஜனதா நீக்கியது + "||" + After Saying BS Yeddyurappa Oath Tomorrow, Karnataka BJP Deletes Tweet

ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு ‘டுவிட்’ செய்தியை பா.ஜனதா நீக்கியது

ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு ‘டுவிட்’ செய்தியை பா.ஜனதா நீக்கியது
ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார் என்ற டுவிட் செய்தியை பாரதீய ஜனதா நீக்கிவிட்டது. #BSYeddyurappa #BJP

பெங்களுரூ,


கர்நாடகாவில் பெரும்பான்மையான காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பாரா அல்லது தனிப்பெரும் கட்சியான பா.ஜனதாவை அழைப்பாரா என்ற கேள்வி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் பாரதீய ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார் என செய்தி வெளியாகியது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்து உள்ளார். நாளை காலை 9:30 மணியளவில் பாரதீய ஜனதா அரசு பதவியேற்கிறது என கர்நாடகா மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டது. 

இதேபோன்று பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், தனிப்பெரும் கட்சியாக வந்த பா.ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார். நாளை 9:30 மணி அளவில் எடியூரப்பா பதவி ஏற்கிறார் என குறுப்பிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக பாரதீய ஜனதா மற்றும் எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் டுவிட்டரில் இருந்து இதுதொடர்பான செய்திகள் எடுத்துவிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தாரா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ‘வி’ வடிவ வெற்றி விரல்களை கர்நாடக பாஜக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் காண்பித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல்
வருமான வரித்துறை அதிகாரியை சந்தித்ததாக கூறிய விவகாரத்தில் மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தினார்.
2. பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினால் பா.ஜனதா வேடிக்கை பார்க்காது
பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினால் பா.ஜனதா வேடிக்கை பார்க்காது என்று தினேஷ் குண்டுராவுக்கு எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. வயலில் இறங்கி நாற்று நட்டு குமாரசாமி நாடகமாடுகிறார் - எடியூரப்பா குற்றச்சாட்டு
விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்காமல் வயலில் இறங்கி நாற்று நட்டு குமாரசாமி நாடகமாடுகிறார் என்று பா.ஜனதா தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
4. 13 மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல்
மழை குறைவாக பெய்துள்ள 13 மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தினார்.
5. வடகர்நாடகத்திற்கு தனிமாநில கோரிக்கையை பா.ஜனதா ஏற்காது எடியூரப்பா பேட்டி
மாநிலத்தை பிரித்தாளும் கொள்கையில் குமாரசாமி ஈடுபடுவதாகவும், வடகர்நாடகத்திற்கு தனிமாநில கோரிக்கையை பா.ஜனதா ஒருபோதும் ஏற்காது என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.