தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபையில் தமிழக பொது கணக்குக்குழு ஆய்வு + "||" + Tamilnadu Public Accounts Study in Delhi Legislative Assembly

டெல்லி சட்டசபையில் தமிழக பொது கணக்குக்குழு ஆய்வு

டெல்லி சட்டசபையில் தமிழக பொது கணக்குக்குழு ஆய்வு
டெல்லி சட்டசபையில் தமிழக பொது கணக்குக் குழுவினர் ஆய்வுப் பணியை மேற்கொண்டனர்.

புதுடெல்லி,

தமிழ்நாடு சட்டசபை பொது கணக்கு குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பினர்கள் தனியரசு (காங்கேயம்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்திய தொகுதி) தமிழ்செல்வன் (பெரம்பலுர்), மாணிக்கம் (சோழவந்தான்), பொன்.சரஸ்வதி( திருச்செங்கோடு) ஆகியோர் கொண்ட குழுவினர் மேகாலயா, சிக்கிம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். நேற்று காலை டெல்லி சட்டசபையில் ஆய்வுப்பணியை மேற்கொண்டனர். இவர்களை டெல்லி குழுவினர் வரவேற்றனர்.

இந்த ஆய்வின்போது நிதி தணிக்கை, செயலாக்க தணிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. டெல்லி சட்டசபையின் பொதுக்கணக்குக்குழுவின் அமைப்பு முறை, செயல்பாடுகளுக்கும், தமிழகத்தின் நடைமுறைகளுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

ஆய்வுக்கு பின்னர் குழுவினர் நேற்று மாலை தமிழ்நாட்டுக்கு புறப்பட்டனர்.