எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: ராணுவ வீரர் காயம்


எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: ராணுவ வீரர் காயம்
x
தினத்தந்தி 17 May 2018 5:37 AM GMT (Updated: 17 May 2018 5:37 AM GMT)

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். #Ceasefire

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா மற்றும் கதுவா மாவட்டத்தில் உள்ள எல்லை நிலைகளை குறிவைத்தும், பொதுமக்கள் வசிக்கும் சில பகுதிகளை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. சிறிய மோர்டார்கள் மூலம் பாகிஸ்தன் நேற்று இரவு முழுவதும் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

  இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். காயம் அடைந்த வீரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த மே 15 ஆம் தேதி, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இந்த ஆண்டு மட்டும் எல்லையில் பாகிஸ்தான் 700 முறை அத்து மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 17 பேர் உட்பட 33 பேர் பலியாகியுள்ளனர். 


Next Story