காங்கிரஸ் போராட்டங்களில் ஈடுபடாமல், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் அனந்த் குமார் எம்.பி.


காங்கிரஸ் போராட்டங்களில் ஈடுபடாமல், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்  அனந்த் குமார் எம்.பி.
x
தினத்தந்தி 17 May 2018 8:00 AM GMT (Updated: 17 May 2018 8:00 AM GMT)

காங்கிரஸ் போராட்டங்களில் ஈடுபடாமல், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்று அனந்த் குமார் எம்.பி. கூறியுள்ளார்.

பெங்களூர்,

பல்வேறு சர்ச்சைக்களுக்கு இடையே, கர்நாடக மாநில முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். பெரும்பான்மை இல்லாமல் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா கர்நாடக மாநில சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

சித்தராமையாவுடன் அசோக் கெலாட், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டசபை வளாகம் முழுவதுமே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.

இந்த பிரச்சனைகளுக்கு இடையில்  தலைமைச்செயலகம் வந்து தனது பணிகளை துவங்கிய முதல் மந்திரி எடியூரப்பா, ரூ. 5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான  விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யும் ஆணையில், தனது முதல் கையெழுத்திட்டார்.

இந்தநிலையில்  அனந்த் குமார்,  எம்.பி. (பாஜக) கூறுகையில்,

கர்நாடகாவில் 3-வது முறையாக பதவி ஏற்ற எடியூரப்பா, பொறுப்பான அரசாங்கத்தையும், திறமையான நிர்வாகத்தையும், செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடாமல், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.  காங்கிரஸ் ஒரு வயோதிபக் கட்சியாக இருப்பது சரியல்ல, இது துரதிர்ஷ்டமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story