தேசிய செய்திகள்

கர்நாடகாவில் நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது, கழுதை ஓட்டம் ‘மோடியை அகற்றியே தீருவேன்” ஜெத்மலானி காட்டம் + "||" + Ram Jethmalani just said his only aim in life is to get rid of Modi

கர்நாடகாவில் நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது, கழுதை ஓட்டம் ‘மோடியை அகற்றியே தீருவேன்” ஜெத்மலானி காட்டம்

கர்நாடகாவில் நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது, கழுதை ஓட்டம் ‘மோடியை அகற்றியே தீருவேன்” ஜெத்மலானி காட்டம்
கர்நாடகாவில் நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது கழுதை ஓட்டம் என விமர்சனம் செய்து உள்ள ஜெத்மலானி ஆட்சியிலிருந்து “மோடியை அகற்றியே தீருவேன்” என கூறிஉள்ளார். #RamJethmalani #PMModi
புதுடெல்லி,

மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே என்னுடைய வாழ்நாளில் ஒரே நோக்கம் என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறிஉள்ளார்.

கர்நாடகாவில் பெரும்பான்மையில்லாத பா.ஜனதாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தமைக்கு எதிராக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளது. பா.ஜனதா முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானியும் சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளார். அவருடைய மனு சுப்ரீம் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ராம் ஜெத்மலானி இந்தியா டுடேவிற்கு பேட்டியளித்து பேசுகையில், கர்நாடகாவில் நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது, கழுதை ஓட்டம் என விமர்சனம் செய்து உள்ளார்.

        “மோடியை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும், சுப்ரீம் கோர்ட்டு மீது எனக்கு நம்பிக்கை போகவில்லை,” என கூறிஉள்ளார். 

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கு பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய ராம் ஜெத்மலானி, “அங்கு நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது, கழுதை ஓட்டம். ஊழலுக்கான வெளிப்படையான அழைப்பிதழ். அவர்களால் ஜனநாயகத்தை அழித்துத்தான் வாக்கை பெற முடியும்,” என கூறி உள்ளார். சட்ட நடைமுறைகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்த ஜெத்மலானி, கர்நாடக மாநில ஆளுநரின் உத்தரவானது அரசியலமைப்பு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார் என சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளார்.