பாஜகவுக்காக அமேசானில் எம்எல்ஏக்களை விலைக்கு கேட்ட வாலிபர்


பாஜகவுக்காக அமேசானில் எம்எல்ஏக்களை விலைக்கு கேட்ட வாலிபர்
x
தினத்தந்தி 17 May 2018 12:32 PM GMT (Updated: 17 May 2018 12:32 PM GMT)

கர்நாடகாவில் பாஜகவுக்காக அமேசானில் எம்எல்ஏக்களை விலைக்கு கேட்ட வாலிபர்

பெங்களூர்

கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். சுப்ரீம் கோர்ட்  பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில்  கர்நாடகாவில் குதிரை பேரம் நடைபெற  வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

அமேசான் இணையதளத்தில் இளைஞர் ஒருவர், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை விலைக்கு கேட்டுள்ளார். 

இதனிடையே இளைஞர் ஒருவர், அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கின் வாடிக்கையாளர் உதவி மையத்திற்கான டுவிட்டர் கணக்கிற்கு டுவிட் ஒன்றை செய்துள்ளார். அதில், தனக்கு ஷாப்பிங் செய்வதில் சிக்கல் உள்ளதாக கூறியிருக்கிறார். அது என்ன பிரச்சினை என அமேசான் கேட்டுள்ளது. 

அதற்கு, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் 7 எம்எல்ஏக்களை வாங்கி, அவர்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு பரிசளிக்க வேண்டும், ஏதாவது நல்ல டீல் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறி கிண்டல் செய்துள்ளார். தற்போது, அந்த டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Next Story