தேசிய செய்திகள்

கர்நாடக கவர்னரின் முடிவை எதிர்த்து ராம் ஜெத்மலானி வழக்கு + "||" + Resist the Karnataka Governor decision Ram Jethmalani case

கர்நாடக கவர்னரின் முடிவை எதிர்த்து ராம் ஜெத்மலானி வழக்கு

கர்நாடக கவர்னரின் முடிவை எதிர்த்து ராம் ஜெத்மலானி வழக்கு
கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு அழைப்பு விடுத்த கவர்னரின் முடிவை எதிர்த்து ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

புதுடெல்லி,

கர்நாடக முதல்–மந்திரியாக பதவி ஏற்க பா.ஜ.க.வை சேர்ந்த எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜூபாய் வாலா நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி இரவோடு இரவாக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. அதனை அவசர வழக்காக ஏற்று விசாரித்த நீதிபதிகள், எடியூரப்பாவின் பதவி ஏற்புக்கு தடைவிதிக்க முடியாது என அறிவித்தனர்.

இதையடுத்து, நேற்று எடியூரப்பா கர்நாடகத்தின் முதல்–மந்திரியாக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தன்னுடைய மனுவில் ‘‘கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா, பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்தது, அரசியலமைப்பு சட்டம் அவருக்கு வழங்கி உள்ள ஒட்டுமொத்த அதிகாரத்தையும், தவறாகப் பயன்படுத்தி இருப்பதை காட்டுகிறது. அவர் தன்னுடைய பதவிக்கும், தான் சார்ந்திருக்கும் அலுவலகத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார்’’ என தெரிவித்து உள்ளார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘‘கர்நாடக கவர்னர் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் தாக்கல் செய்த மனு 18–ந் தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு வர உள்ளது. அதோடு சேர்த்து இந்த வழக்கைத் தாக்கல் செய்யுங்கள்’’ என அறிவுறுத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. பொறியியல் நுழைவுத்தேர்வு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பொறியியல் நுழைவுத்தேர்வு வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
2. ரூ.98 லட்சம் நகை கொள்ளை வழக்கு: சரணடைந்த 2 பேரை 6 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோவை கோர்ட்டு உத்தரவு
ரூ.98 லட்சம் நகை கொள்ளை வழக்கில் சரணடைந்த 2 பேரை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
3. 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 31–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 31–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4. காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு
காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. பெண்கள் விடுதிகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை முறையாக பின்பற்றக்கோரி வழக்கு; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
பெண்கள் விடுதிகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை முறையாக பின்பற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.