தேசிய செய்திகள்

'காங்கிரஸ்தான் ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியது' அமித்ஷா தாக்கு + "||" + 'The Congress carried out the democratic assassination'Amit Shah attack

'காங்கிரஸ்தான் ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியது' அமித்ஷா தாக்கு

'காங்கிரஸ்தான் ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியது' அமித்ஷா தாக்கு
மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு வாய்ப்பு அளித்ததன் மூலம் காங்கிரஸ்தான் ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியது என்று அமித்ஷா கடும் தாக்கு.

புதுடெல்லி,

கர்நாடகாவில் பா.ஜனதாவை ஆட்சியமைக்குமாறு கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. மாநிலத்தில் ஜனநாயக படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அந்த கட்சியும், அதன் தலைவர் ராகுல் காந்தியும் கூறியுள்ளனர். இதற்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று பதிலடி கொடுத்தார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கர்நாடகாவில் பா.ஜனதா 104 இடங்களை பெற்று இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கோ 78 இடங்களே கிடைத்துள்ளன. எனவே அங்கு பா.ஜனதா ஆட்சியமைக்கவே மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் முதல்–மந்திரி மற்றும் பல மந்திரிகள் தோல்வியடைந்துள்ளனர். வெறும் 37 இடங்களை பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதாதளமும், பல இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. இதை புரிந்துகொள்ளும் அளவுக்கு மக்கள் புத்திசாலிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநில வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் வெறும் அற்ப அரசியல் லாபத்துக்காக, கர்நாடகத்தில் ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கிய நிமிடத்தில்தான் ஜனநாயக படுகொலை நிகழ்ந்தது என்று கூறியுள்ள அமித்ஷா, இது அவமானகரமானது என்றும் தெரிவித்துள்ளார்.

இதைப்போல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நாட்டில் அவசர நிலை கொண்டுவரப்பட்டதாகவும், காங்கிரஸ் கட்சிதான் அரசியல் சட்டத்தின் 356–வது பிரிவை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தேசிய அளவில் காங்கிரஸ்–இந்திய கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை முத்தரசன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என முத்தரசன் கூறினார்.
2. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மூன்று பேர் கலந்து கொள்ளவில்லை; பா.ஜனதா மீது சித்தராமையா சாடல்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
3. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்ய 3 பேர் நியமனம் : மந்திரி பதவி வழங்கவும் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு
பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கும் வகையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த மந்திரிகள் உள்பட 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிருப்தியாளர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது பற்றி காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
4. உழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவிப்பு
உழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் என்று கட்சியின் மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவித்துள்ளார்.
5. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி
பா.ஜனதா தலைவர் அமித்ஷா உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #AmithShah #AIIMS