தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு + "||" + second bus, carrying Congress MLAs, arrived at Hotel Hilton in Bengaluru.

ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு

ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு
ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தடைந்தனர். #KarnatakaElection2018 #trustvote
பெங்களூரு,

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் 104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதாவை ஆட்சி அமைக்குமாறு கூறி கவர்னர் அழைப்பு விடுத்தார். மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கினார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து பா.ஜனதாவினர், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர். இதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் விலை போகாமல் இருப்பதற்காக அவர்களை பாதுகாக்க தொடங்கினர். அவர்களை ஒருங்கிணைத்து ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ஒரு ரெசார்ட்டில் தங்க வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களை அங்கிருந்து பஸ் மூலம் ஐதராபாத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு சொகுசு ஓட்டலில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். 

இதற்கிடையில்,  இன்று காலை கர்நாடக சட்டப்பேரவை கூடுகிறது. மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெற உள்ளதையொட்டி, ஐதராபாத்தில் இருந்து, பேருந்து மூலமாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று காலை பெங்களூரு வந்தனர். பெங்களூருவில் உள்ள  தனியார் ஓட்டலில் எம்.எல்.ஏக்கள்  தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம்: நடிகர் விஷால் திருமணம் - ஆந்திரா பெண்ணை மணக்கிறார்
ஐதராபாத்தில் நடிகர் விஷாலின் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. ஆந்திரா பெண்ணை மணக்க உள்ளார்.
2. ஐதராபாத்தில் போனில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்கு
ஐதராபாத்தில் போனில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. சிறைத்துறை நடத்திய முகாம்: 155 முன்னாள் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு
ஐதராபாத்தில் சிறைத்துறை நடத்திய முகாமில், 155 முன்னாள் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
4. ஐதராபாத்: நாட்டிலேயே முதல் முறையாக நாய்களுக்கான பூங்கா விரைவில் திறக்கப்படுகிறது
நாட்டிலேயே முதல் முறையாக நாய்களுக்கான பூங்கா ஐதராபாத்தில் விரைவில் திறக்கப்படுகிறது.
5. ஐதராபாத் நிஜாம் மியூசியத்தில் தங்க டிபன் பாக்ஸை திருடிய திருடர்கள் சிக்கினர்
ஐதராபாத் நிஜாம் மியூசியத்தில் தங்க டிபன் பாக்ஸை திருடிய திருடர்களை போலீஸ் கைது செய்துள்ளது.