குமாரசாமி அமைச்சரவையில் 2 துணை முதல்வர்கள்; காங்கிரசுக்கு 20 மந்திரிகள் வாய்ப்பு


குமாரசாமி அமைச்சரவையில் 2 துணை முதல்வர்கள்; காங்கிரசுக்கு  20 மந்திரிகள் வாய்ப்பு
x
தினத்தந்தி 21 May 2018 5:50 AM GMT (Updated: 21 May 2018 5:50 AM GMT)

23-ந்தேதி கர்நாடக முதல்வராக பதவி ஏற்கும் குமாரசாமி அமைச்சரவையில் 2 துணை முதல்வர்கள்; காங்கிரசுக்கு 20 மந்திரிகள் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #Kumaraswamy

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.

அதன்படி, கடந்த 17-ந் தேதி எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பின்னர் நேற்று முன்தினம் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாததால் எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணியில் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள குமாரசாமியை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து, வருகிற 23-ந் தேதி (புதன் கிழமை) முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளார்.அவரது அமைச்சரவை  மந்திரிகள்  நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் பதவியேற்பார்கள். 

முதல்வர் பதவியேற்பு விழாவில், கான்டிராவ அரங்கில் ஒரு பெரிய நிகழ்ச்சியாக நடக்கிறது. விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன்சமாஜ்  தலைவர் மாயாவதி, சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தி.மு.க செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் மற்றும் பல பிராந்திய தலைவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று டெல்லி செல்லும் குமாரசாமி அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். மந்திரி பதவி யாருக்கெல்லாம் வழங்குவது, அடுத்தக்கட்டமாக ஆட்சியை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம்  மந்திரி சபையில் 20-13 என்ற பார்முலாவில் மந்திரிகள்  இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.   காங்கிரசுக்கு 20 மந்திரிகளும், மதசார்பற்ற  ஜனதா தளத்திற்கு 13 மந்திரிகளும் இருப்பார்கள். குமாரசுவாமி நிதி அமைச்சகத்தை தன்  வசம்  வைத்தது கொள்வார் என கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் டி. கே. சிவகுமாருக்காக  உள்துறை மற்றும் முக்கிய துறைகளை காங்கிரஸ் தன்வசம் வைத்துக் கொள்ளும். சிவக்குமார் எம்.எல்.ஏ.க்கள் பி.ஜே.பி மூலம் வேட்டையாடுவதை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.  மேலும் குமாரசாமி அமைச்சரவையில் 2 துணை முதல்வர்கள் இடம்பெறுவார்கள் எனகூறப்படுகிறது.

கர்நாடக காங்கிரசின் தலைவர் மற்றும் ஒரு தலித் தலைவரான ஜி பரமேஸ்வரா  துணை முதல்வராகும் வாய்ப்பு உள்ளது. வடக்கு கர்நாடகாவில் கட்சித் தலைவர்களிடமிருந்து  பதவி வேண்டும் என்ற அதிகரித்து வருகிறது. அந்த பிராந்தியத்திலிருந்து ஒரு லிங்காயத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று  கோரிக்கை எழுந்து உள்ளது.

Next Story