பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு வங்காள விபூஷண் விருது; டுவிட்டரில் மம்தா பானர்ஜி


பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு வங்காள விபூஷண் விருது; டுவிட்டரில் மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 21 May 2018 7:11 AM GMT (Updated: 21 May 2018 7:18 AM GMT)

பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மேற்கு வங்காளத்தின் உயரிய வங்காள விபூஷண் விருது இன்று வழங்கப்படுகிறது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரியாக இருப்பவர் மம்தா பானர்ஜி.  இவர் கடந்த 2011ம் ஆண்டு பதவியேற்ற பின்னர், தங்களது துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில் வங்காள விபூஷண் மற்றும் வங்காள பூஷண் ஆகிய விருதுகளை உருவாக்கினார்.

இந்நிலையில் பானர்ஜி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், வங்காள அரசானது ஆஷா போஸ்லே ஜி, புரோசென்ஜித் சாட்டர்ஜி மற்றும் சியாமல் குமார் சென் உள்பட சாதனையாளர்களுக்கு வங்காள விபூஷண் மற்றும் வங்காள பூஷண் ஆகிய விருதுகளை இன்று வழங்கும் என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, எழுத்தாளர் சமரேஷ் மஜும்தார் வங்காள விபூஷண் விருதினையும், கால்பந்து வீரர் சுப்ரதா பட்டாசார்யா வங்காள பூஷண் விருதினையும் பெறுவார்கள் என கூறியுள்ளார்.


Next Story