பிட் அடிக்கும் மாணவர்களை கண்டறிய கல்லூரி கழிவறையில் சி.சி.டி.வி. கேமிராக்கள்


பிட் அடிக்கும் மாணவர்களை கண்டறிய கல்லூரி கழிவறையில் சி.சி.டி.வி. கேமிராக்கள்
x
தினத்தந்தி 21 May 2018 8:00 AM GMT (Updated: 21 May 2018 8:28 AM GMT)

உத்தர பிரதேசத்தில் பிட் அடிக்கும் மாணவர்களை கண்டறிய கழிவறையில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

அலிகார்,

உத்தர பிரதேசத்தில் அலிகார் பகுதியில் தரம் சமாஜ் டிகிரி கல்லூரி செயல்பட்டு வருகிறது.  ஆண்களுக்கான இந்த கல்லூரியின் கழிவறைகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், இதுபற்றி கல்லூரியின் முதல்வர் ஹேம் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மாணவர்கள் தங்களது ஆடைகளில் தேர்வுக்கு தயாராகும் முன் பிட் பேப்பர்களை மறைத்து வைத்து மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்களது இந்த செயலை குறைக்கும் வகையில் கழிவறைகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.  இதனால் மாணவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் எந்த தலையீடும் இல்லை.  எனவே போராட்டம் நடத்துவது தேவையில்லை என கூறியுள்ளார்.


Next Story