ஸ்டெர்லைட் போராட்டம்; பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது அரச பயங்கரவாதம் ராகுல் காந்தி கடும் கண்டனம்


ஸ்டெர்லைட் போராட்டம்; பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது அரச பயங்கரவாதம் ராகுல் காந்தி கடும் கண்டனம்
x
தினத்தந்தி 22 May 2018 1:13 PM GMT (Updated: 22 May 2018 3:50 PM GMT)

தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். #RahulGandhi SterliteProtest


புதுடெல்லி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பெண்கள் உட்பட 11 பேர்  உயிரிழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. போராட்டம் நடத்திய பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில்,  “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் 9 பேர் கொல்லப்பட்டது, அரசு ஸ்பான்ஸர் செய்யும் பயங்கரவாதத்தின் கொடூரமான உதாரணமாகும். அநீதிக்காக எதிராக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். என்னுடைய எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பற்றியே உள்ளது,” என கூறிஉள்ளார். 

Next Story