தேசிய செய்திகள்

கணவனை கட்டிவைத்து மனைவி பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி + "||" + Bengal tantrik ties up man, rapes his wife, claims he was helping couple to conceive

கணவனை கட்டிவைத்து மனைவி பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி

கணவனை கட்டிவைத்து மனைவி பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி
கணவனை கட்டிவைத்து அவர் முன்னே மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி அவர் கருவுறுவதற்கு உதவுவதாகக் கூறினார்.
கொல்கத்தா

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி குழந்தை பிறக்க  உதவ கோரி ஹவுராவில் உள்ள பூபதி நகரில் உள்ள ரஹ்மத் அலி ஷேக் ஆசிரமத்திற்கு  சென்றனர். அங்கு  42 வயது  உள்ள ரஹ்மத் அலி ஷேக்  கணவனை தூணில் கட்டி வைத்து விட்டு  மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் தம்பதியிடம் இருந்த நகை மற்றும் பணத்தை  அபகரித்து கொண்டு அவர்களை விரட்டி விட்டார்.

ஆசிரமத்தை விட்டு வெளியே வந்த தம்பதியினர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார்  ஷேக் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

போலீசார் மந்திரவாதி ஷேக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் மந்திரவாதி அந்த தம்பதியினருக்கு உதவி செய்வதற்காகத்தான் தான் அப்படி செய்ததாக கூறினார். அவர்கள் சம்மதத்தின் பேரிலேயே இது நடந்தது என கூறி உள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
3. பள்ளி மாணவியை கடத்திய 3 இளைஞர்கள் -ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்
ஈரோட்டில் பள்ளி மாணவியை கடத்தி ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
4. 11-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் 4 என்ஜினியரிங் மாணவர்கள் கைது
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 11-ம் வகுப்பு மாணவியை 4 என்ஜினியரிங் மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
5. 13 வயது தங்கையை கர்ப்பமாக்கிய 17 வயது அண்ணனுக்கு வலைவீச்சு
கோவையில் 13 வயது தங்கையை கர்ப்பமாக்கிய 17 வயது அண்ணனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.