தேசிய செய்திகள்

டியூசன் வந்த மாணவனுடன் காதல்; அவன் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக ஆசிரியை மிரட்டல் + "||" + 33 year old woman teacher held for sex with her 15 year student

டியூசன் வந்த மாணவனுடன் காதல்; அவன் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக ஆசிரியை மிரட்டல்

டியூசன் வந்த மாணவனுடன் காதல்;  அவன் இல்லை என்றால்  தற்கொலை செய்து கொள்வதாக ஆசிரியை மிரட்டல்
டியூசன் படிக்க வந்த மாணவனுக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்

சண்டிகரின் ராம்தர்பார் பகுதியைச் சேர்ந்தவர் உமா (34). இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர் அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவரது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 10-ஆம் வகுப்பு மாணவனும், அவனது தங்கையும் உமாவிடம் டியூசன் படித்து வந்துள்ளனர்.அப்போது அவர் மாணவனுக்கு தனியாக பாடம் சொல்லித் தர வேண்டும், இதன் காரணமாக தங்கையை அனுப்ப வேண்டாம். அவளுக்கு நேரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.அதன் பின் இருவரும் தனித் தனியாக டியூசனுக்கு சென்று வந்த நிலையில், இதைப் பயன்படுத்திக்கொண்ட உமா மாணவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார். இது கடந்த வருடத்தில் இருந்து தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி தன்னிடம் தொடர்பு கொள்ள மாணவனுக்கு தனி சிம்கார்டு ஒன்றையும் கொடுத்துள்ளார்.

இப்படி இது நடந்து வந்த வேளையில், மாணவன் சரியாக பாடத்தில் மதிப்பெண் எடுக்காத காரணத்தினால் பெற்றோர் டியூசனுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.மாணவனும் தொடர்ந்து டியூசனுக்கு செல்லாததால், மாணவனின் வீட்டுக்கு சென்ற உமா அவனை டியூஷனுக்கு அனுப்புங்கள், இனி நன்றாகப் படிப்பான். அதற்கு நான் கியாரண்டி என்று கூறியுள்ளார். அப்போதும் அவர்கள் அனுப்பவில்லை. 

கடந்த சில நாட்களுக்கு முன் மகனுடன் வீட்டுக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு உமா கூறியுள்ளார்.அதன் பின் மாணவனுடன் அவனது பெற்றோரும் உமாவின் வீட்டிற்கு சென்றனர். கணவரிடம், நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று கூறிய உமா, மாணவனை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஓர் அறைக்குள் வைத்து பூட்டியுள்ளார்.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவர, அவர்கள் தலையிட்டு மாணவனை பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இருப்பினும் அவர்களை பின் தொடர்ந்த உமா, அவனை என்னுடன் அனுப்பவில்லை என்றால், உங்கள் வீட்டுக்குள் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறுகையில் வைத்திருந்த டானிக் பாட்டில் ஒன்றை திறந்து வாயில் ஊற்ற, மேலும் அவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், போலீசார் உமாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி லீக்: குஜராத்தை வென்றது அரியானா
புரோ கபடி லீக் போட்டியில் அரியானா அணி, குஜராத்தை வென்றது.
2. காஷ்மீர் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய மாணவர்கள் பஞ்சாப்பில் கைது
காஷ்மீர் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 3 மாணவர்கள் பஞ்சாப்பில் கல்லூரி விடுதில் கைது செய்யப்பட்டனர்.
3. மோடிஜி ‘பெண் குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு என்கிறீர்கள், எப்படி செய்யப்போகிறீர்கள்’ தாய் கண்ணீர் பேட்டி
அரியானாவில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
4. பஞ்சாப்பில் இருந்து கேரளாவுக்கு 138 டன் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் இருந்து கேரள மழை வெள்ள நிவாரணத்திற்காக 138 டன் நிவாரணப் பொருட்கள் நேற்று ரெயில் மற்றும் ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
5. ஆபரேசன் புளூஸ்டார்: பஞ்சாப் பொற்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பஞ்சாப் மாநிலத்தில் ஆபரேசன் புளூஸ்டார் நினைவு நாளையொட்டி பொற்கோவிலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #OperationBlueStar